Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவலை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். 

குறித்த தகவல் முற்றிலும் தவறானவை என தெரிவித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படவுள்ளமை தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எவ்வித சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget