இந்த ரோபோ ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது போலவே கருவைச் சுமந்து ஒரு முழுமையான குழந்தையை பெற்றெடுக்கும் திறன் கொண்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாட்டில், ‘கைவா டெக்னாலஜி’யின் நிறுவனர் டாக்டர் ஜாங் கிபெங் இந்த புரட்சிகரமான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பையின் அனைத்து செயல்பாடுகளையும் துல்லியமாக செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது. இது செயற்கை அம்னியாட்டிக் திரவம் மற்றும் ஊட்டச்சத்து விநியோக அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு ஒருபுறம் மலட்டுத்தன்மைக்கு ஒரு தீர்வாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இது பல சட்டரீதியான விவாதங்களை எழுப்பியுள்ளது.
“ஒரு ரோபோவால் பெற்றெடுக்கப்படும் குழந்தைக்கு உணர்வு ரீதியான பிணைப்பு எப்படி இருக்கும்? பெற்றோர் யார்? ஒரு குழந்தையின் உரிமைகள் என்ன?” போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் இந்த தொழில்நுட்பம் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்க அறிவியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Post a Comment