கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எயார் கனடா நிறுவனமும், அதன் விமானப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
இன்றைய தினம் முதல் கிரமமான அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான பயணிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமான சேவையின் வழமையான பணிகள் மீண்டும் தொடர்வதற்கு சுமார் 7 முதல் பத்து நாட்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment