Ads (728x90)

நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நேற்று நடைபெற்றது. இப்பரீட்சையில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார். 

மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு குழந்தையின் குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். 

அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget