Ads (728x90)

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று சந்தேக நபரை செப்டம்பர் 8 மாதம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று களுத்துறை நகரில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாகொடையைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகரசபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget