கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, மற்றும் கல்சியம் போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இதில் அடங்கி உள்ளன.
கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். கறிவேப்பிலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும். இது பசியின்மை, செரிமானக் கோளாறு, மற்றும் வயிற்று இரைச்சல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்கிறது.

Post a Comment