பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதம நீதியரசரைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து முறையற்ற வகையில் சட்டத்துக்கு விரோதமான முறையில் அவரை பதவி நீக்கியவர்கள் இன்று எம்மை நோக்கிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆச்சரியமாகவுள்ளது.
நாட்டில் அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின் பிரகாரமே பொலிஸ்மா அதிபரைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எம்மால் எடுக்கப்பட்டன.
சிறைக்கைதி ஒருவரின் அந்தரங்க உறுப்பில் சித்தாலேப தைலத்தைப் பூசி மிகவும் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கிய மனித உரிமை மீறல் வழக்கில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.
இந்த நபரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாம் என்று நாட்டில் பல்வேறு தரப்பினர் கடுமையாக வலியுறுத்தினார்கள். மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொள்ளாமலே கடந்த அரசாங்கம் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தது.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனே பொறுப்பாளி. அன்றைய தினம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தாமலிருந்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.

Post a Comment