Ads (728x90)

2025 ஆம் அண்டுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரித் அசலங்க தலைமையிலான குறித்த அணியில் பெத்தும் நிஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்ன, மகீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் 28 வரை அபுதாபி மற்றும் டுபாயில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷூடன் செப்டம்பர் 13 ஆம் திகதி விளையாடவுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget