எனவே நீதித்துறை நடவடிக்கைகள் முடிந்தவுடன் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும் என்றும், பட்டதாரிகள் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளிடையே கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
அத்துடன் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை திருத்துவதற்கும், வயது வரம்பை நீட்டிப்பதற்கும், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன்போது இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி தேவைக்கேற்ப பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment