Ads (728x90)

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களின் அலுவலகம் ஆகியவற்றிற்கு ஒரு புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

சர்வதேச காணாமல் போனவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காணாமல் போனவர்களின் அலுவலகம் நேற்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தக் குற்றங்கள் வாழ்வதற்கான உரிமை குடும்ப ஒற்றுமைக்கான உரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வேண்டுமென்றே மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget