Ads (728x90)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அவை சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல ட்ரம்புக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஒ க்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget