Ads (728x90)

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 

அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. 

இந்நிலையில் கைது செய்யபட்ட ஐவரையும் இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில் அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget