Ads (728x90)

சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மத்திய அரச மற்றும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 20 வைத்தியசாலைகளுக்கு 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வண்டியின் பெறுமதி ரூபா 25.7 மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த ஆம்புலன்ஸ்கள் பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன, மேலும் நோயாளியை வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது பல்வேறு சிகிச்சைகளை வழங்க முடியும்.

இந்த 20 அதிநவீன ஆம்புலன்ஸ் வண்டிகள் எம்பிலிப்பிட்டிய, நாவலப்பிட்டிய, மாத்தளை, நீர்கொழும்பு, திருகோணமலை, நுவரெலியா, சிலாபம், மொனராகலை, தம்புள்ளை, ஹொரணை ஆகிய பத்து மாவட்ட பொது மருத்துவமனைகள், பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, அனுராதபுரம் ஆகிய நான்கு போதனா வைத்தியசாலைகள், பொத்துவில், கந்தளாய், அக்கரைப்பற்று, தெஹியத்தகண்டிய ஆகிய நான்கு அடிப்படை மருத்துவமனைகள், அம்பாறை பொது மருத்துவமனை மற்றும் சிகிரியா மருத்துவமனை ஆகியவற்றிற்கு விநியோகிக்கப்பட்டன.


Post a Comment

Recent News

Recent Posts Widget