Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இங்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளுடனும் குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் கூட்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget