இந்த கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நவம்பர் 2 ஆம் திகதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. தொடரை ஆரம்பித்து இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கௌஹாத்தியில் மோதவுள்ளன.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுன்ட் ரொபின் அடிப்படையில் நடைபெறவிருப்பதோடு ஆரம்ப சுற்றில் ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதன்படி முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் ஒக்டோபர் 29 மற்றும் 30 ஆம் திகதியும் இறுதிப் போட்டி நவம்பர் 2 ஆம் திகதியும் நடைபெறும்.
போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடித் தகுதி பெற்றது. மகளிர் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலின்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றன. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதிகாண் சுற்றின் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றன.
இந்தியாவில் கௌஹாத்தி, இந்தூர், விசாகபட்னம் மற்றும் நவி மும்பையிலும் இலங்கையில் கொழும்பிலும் போட்டிகள் நடைபெறும். பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் தகுதி பெற்றால், முதல் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் கொழும்பிலேயே நடைபெறும்.

Post a Comment