இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மட்டுமல்லாமல், நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம்.
எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் “எக்ஸ்போ 2025” உலகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, விவசாயம் மற்றும் கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு போன்ற அதிக திறன் கொண்ட துறைகளை வளர்ப்பதற்கான இலங்கையின் கொள்கையை இது பிரதிபலிக்கிறது.
தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இதனிடையே ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும், கடினமான காலங்களிலும் ஜப்பான் ஆதரவளித்து வருவதாகவும் ஜனாதிபதி நினைவூட்டினார்.



Post a Comment