ஜப்பானில் நடந்த ஏலத்தில் இந்த வகை தேயிலை ஒரு கிலோகிராம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை அடுத்து இந்த சாதனை அடையப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை குறித்து கருத்து தெரிவித்த நியூ விதானகந்தே தேயிலை தொழிற்சாலையின் தலைமை செயற்பாட்டு அதிகாரி புபுது குணசேகர, "இது நியூ விதானகந்தேவின் சாதனை மட்டுமல்ல, இலங்கை தேயிலையின் ஒப்பற்ற தரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனுக்கான உலகளாவிய வெளிச்சம்" என்றார்.
இது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் தருணம். மற்றும் நமது உள்ளூர் சிறப்பை உலக அளவில் அங்கீகரிக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கின்னஸ் உலக சாதனை இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலைக்கான சர்வதேச சந்தையில் ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment