Ads (728x90)

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உட்பட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி கனியவள கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான ரூபா 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக செலவழித்து அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது.

அதன்படி அறிவித்தல் அனுப்பப்படும்போது பிரதிவாதிகள் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்ட மேலதிக நீதவான், பின்னர் வழக்கு நடவடிக்கைகளை முடிவுறுத்த உத்தரவிட்டார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget