Ads (728x90)

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சுமார் 3,100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் கடந்த 31ஆம் திகதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget