Ads (728x90)

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் மொகமட் நாபி அதிரடியாக விளையாடி இறுதி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 60 ஓட்டங்களையும், அணியின் தலைவர் ரஜீட் கான் Rashid மற்றும் இப்ராகிம் ஸட்கான் தலா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் துஷாரா 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

தொடர்ந்து 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், துஷல் பெரெரா 28 ஓட்டங்களையும், கமின்டு மென்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் குழு B பிரிவிலிருந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget