Ads (728x90)

ஆசிய கிண்ண T20 தொடரின் 12வது போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஷேக் ஜாயித் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 188 ஓட்டங்களை எடுத்தது. 

இந்திய அணி சார்பில் சஞ்சு சம்சன் அதிகபட்சமாக 56 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 15 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் பெற்றனர்.

இந்நிலையில் 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஓமான் அணி சார்பில் அமீர் கலீம் அதிகபட்சமாக 64 ஓட்டங்களையும், ஹம்மட் மிர்ஷா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget