டிஜிட்டல் பொருளாதாரத்தின் நன்மைகளை வெற்றிகொள்ளத் தேவையான பாதுகாப்பு மற்றும் நம்பகமான சூழலை உருவாக்குவதற்கு இந்த தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயம் (2025 - 2029) மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் (NCSOC) பங்களிப்பதுடன், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தால் கிடைக்கும் வெற்றிகளை விரைவாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நாடுகள், மிக விரைவாக முன்னேற்றத்தை நோக்கி நகரும் என்பதையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.அதன்போது, இந்த தேசிய சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பு நமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும், பிரஜைகளின் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.



Post a Comment