Ads (728x90)

ஆசிய கோப்பை ரி20 கிரிக்கெட் தொடர் சுற்று போட்டி முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. 

சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் இந்த சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் சாஹிப்சாதா பர்ஹான் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும், சுப்மன் கில் 47 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget