Ads (728x90)

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று அதில் கையெழுத்திட்டுள்ளார். 

சாதாரண பொது வாழ்க்கையைப் பராமரிப்பது அவசியம் என்பதையும், அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget