போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும், ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர்.
வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
140 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களையும், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர்.
மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Post a Comment