Ads (728x90)

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம இடையிலான கட்டுமான பணிகள் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும் திட்டத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறப்பட்டுள்ளது.

37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளை 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget