தற்போது இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் வாகன இருக்கை பட்டிகள் பொருத்தப்படவில்லை. அவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே பொதுப்போக்குவரத்துத் துறையைப் பொறுப்புடன் கையாள வேண்டியது அவசியம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே இருக்கை பட்டிகள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் இருக்கை பட்டிகளை பொருத்த முடியாது? இப்போது சில சாரதிகள் என்னையும், பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர்.
அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும். நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Post a Comment