Ads (728x90)

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தான் ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வந்து தூய்மைப்படுத்துகிறார். ஆம் நாங்கள் போதைப்பொருள் கொண்டு வந்தோம். அரசாங்கம் ஏன் அதை பிடிக்கவில்லை என்பதே இவர்களின் தர்க்கமாகும். 

நாமல் ராஜபக்ஷ 2029 இல் ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார். ஐஸ் போதைப்பொருள்காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். இது வெட்கக்கேடானது என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கடுமையாக சாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை உருவாக்கி போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள குழுக்களையும் பாதுகாத்தவர்கள் கலக்கமடைந்து தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய வேண்டும். 

எதிர்கட்சித் தலைவர் 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கும், இந்த 02 ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். முதலில் இவர் பதவிக்கு ஏற்றாற்போல் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட நடவடிக்கை எடுக்கும் போது திணறமாட்டோம் என்று குறிப்பிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் திணறுகிறார்கள் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget