Ads (728x90)

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் 16 வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி பதவி விலகினார். இதையடுத்து வெற்றிடமான அப்பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர். 

இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று இந்தியாவின் 17 வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget