நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பாக நேபாள ராணுவத்தளபதி அஷோக் சிக்டெல் தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டநிலையில் நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார். நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றதும் கார்கி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அடுத்த ஆண்டு மார்ச் 04 திகதி புதிய பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Post a Comment