அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றது. நிசாகத் கான் 42 ஓட்டங்களையும், ஜீஷன் அலி 30 ஓட்டங்களையும், யாசிம் முர்தசா 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ஓட்டங்களையும், தன்சித் ஹசன் 14 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 59 ஓட்டங்களையும், தவ்ஹித் ஹிருதோய் 35 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இறுதியில், பங்களாதேஷ்17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Post a Comment