Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் நேற்று பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி கச்சதீவு விஜயத்தின் போது கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார். மேலும் கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்துள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget