அபூதாபியில் நேற்று பி குழுவுக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆப்கானிஸ்தான் அணி ஆரம்ப வீரர் சாதிகுல்லா அடல் 52 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று மத்திய பின் வரிசையில் வந்த அஸ்மதுல்லா ஒமர்சாய் 21 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களையே பெற்றது.
இந்த வெற்றி மூலம் ஆப்கான் அணி பி குழுவில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Post a Comment