Ads (728x90)

ஆசிய கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், சிவம் டூபே 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

58 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது

 

Post a Comment

Recent News

Recent Posts Widget