ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானிற்கு வருகைதரும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் திறனை அதிகரிக்க ஜப்பான் நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கவுள்ளது.
இத்தோடு விசாரணைகள், கண்காணிப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை, கடற்படை ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் பெறவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றும் ஜனாதிபதி திசாநாயக்க, தனது விஜயத்தின் போது உத்தியோகபூர்வ பரிமாற்ற ஆவணங்களில் கையெழுத்திடுவார்.
செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலும் அவர் கலந்துகொள்வார். மேலும் மூத்த ஜப்பானியத் தலைவர்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.

Post a Comment