மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு கொள்கலனில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரான சம்பத் மனம்பேரியைக் கைது செய்ய பொலிஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பத் மனம்பேரி இன்று காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
Post a Comment