பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment