நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியைத் தடுப்பதையும், முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
சமீப காலங்களில் பெறப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மிக விரைவாக ஒன்றன்பின் ஒன்றாக தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றனர். ஏதோ ஒரு வகையில் உருமாறி வரும் ஒரு குழு இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளது. சில குழுக்கள் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர்களாக மோசடி செய்கின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்துவதன் மூலமோ அல்லது தேவைப்பட்டால் ஒரு புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலமோ வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment