Ads (728x90)

2025 ஆசிய கோப்பையின் 04வது போட்டியாக 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமன் அணியை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.

முகமது ஹாரிஸ் 66 ஓட்டங்களையும், சாஹிப்சாதா பர்ஹான் 29 ஓட்டங்களையும், பக்கர் ஜமான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் எடுத்தனர். 

பந்து வீச்சில் ஓமன் அணியினர் ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் தலா 03 விக்கெட்டுகளையும், முகமது நதீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆமிர் கலீம் 13 ஓட்டங்களையும், ஹம்மத் மிர்சா 27 ஓட்டங்களையும் எடுத்தனர், 

பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், சுபியான் முகீம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget