Ads (728x90)

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2023 ஜூன் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை செப்டம்பர் 9ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

முன்னர் பேருந்துகளின் அலங்காரம் மற்றும் உதிரிப்பாகங்களை நிறுவுதல் தொடர்பான சட்ட விதிகளுக்கு அனுமதி வழங்கி சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget