Ads (728x90)

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 41 ஓட்டங்களால் பங்களாதேஷை வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்தியா முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget