யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


Post a Comment