பொதுஜன பெரமுன ஐஸ் போதைப்பொருள் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பதற்றம் அடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக போதைப்பொருள் கடத்தல்காரரான மாக்கந்துரே மதுஷ் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர் தம்முடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிகளின் விபரங்களை வெளியிடுவதாக கூறியதை அடுத்தே கொல்லப்பட்டதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் கெஹெல்பத்ர பத்மே உள்ளிட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரங்கள் வெளிக்கொணரப்படும் என்றும் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நிமல் லான்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக சென்று அவரை விடுவித்தார்.
அன்று நிமல் லான்சாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போதைப்பொருள் விநியோக வலையமைப்புக்கு உந்துதல் அளித்தவர்கள் அன்று அரசாங்கத்தினுள்ளேயே இருந்ததால் எந்த சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதேநேரம், போதைப்பொருளுடன் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலை செய்தார் என்றும் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
123.jpg)
Post a Comment