Ads (728x90)

வெலிகமவில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 'மெபெட்ரோன்' ('Mephedrone') என்ற போதைப்பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த போதைப்பொருளானது ஐஸ் ரக போதைப்பொருட்களையும் விட மிகவும் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருளானது முதல் முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 22 ஆம் திகதி வெலிகம பகுதியில் விடுதியொன்றில் ரஷ்ய நாட்டவரின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவந்ததாக கூறப்படும் ரகசிய போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போதே ஐஸ் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய குறித்த போதைப்பொருளுடன் 18 வயதுடைய மோல்டா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget