இந்தக் கலந்துரையாடலில் JETRO வின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஷிகுரோ நோரிஹிகோ (Ishiguro Norihiko) மற்றும் ஜப்பான்- இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவரும், ITOCHU கார்ப்பரேஷனின் தலைவருமான ஃபுமிஹிகோ கபயாஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையில் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அத்துடன் மோசடி மற்றும் ஊழலை ஒழித்து முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளிகளில் ஒன்றான ஜப்பானுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment