மின்சாரத்துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக நடைபெற்ற கலந்துரையாடல் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் மிகவும் செயற்திறனாகவும், தொடர்ச்சியாகவும், நியாயமான விலையிலும் நுகர்வோரின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அது அரசாங்கத்திற்கும், ஊழியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Post a Comment