Ads (728x90)

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றிரவு அமெரிக்கா பயணமானார்.

இந்த விஜயத்தின் போது நாளை புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget