மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ, கொட்டியாகல பகுதியில் 500 ஏக்கர் காணியில் முன்னெடுக்கப்படவுள்ள 140 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான இந்த திட்டம், தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரத்தைச் சேர்ப்பதுடன், ஆண்டுதோறும் 219 கிகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இந்த திட்டத்தின் ஊடாக டீசல் இறக்குமதியைக் குறைப்பதன் மூலமும், ஒவ்வொரு ஆண்டும் 150,000 மெட்ரிக் தொன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலமும் ரூபா 21 பில்லியன் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்தனவி லிமிடெட் மற்றும் விண்ட்போர்ஸ் பிஎல்சி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியான ரிவிதனவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதன் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 70% மின்சாரத்தைப் பெறுவதற்கான இலங்கையின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment