தற்போதைய அரசாங்கம் எந்த விதத்திலும் உங்கள் சேவையில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தவோ, தலையிடவோ செய்யாது. ஆகையினால் உங்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சட்டத்தை சுதந்திரமாக அமுல்படுத்துவதற்கு எந்தத் தடையும் ஏற்படப் போவதில்லை. அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கு உங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியிலான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்பு ரீதியிலான, பொதுமக்களுக்கு நெருக்கமான ஒரு சேவையாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை பொலிஸ் துறையின் 84 ஆவது பொலிஸ் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் துறையின் 84 ஆவது விளையாட்டுப் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சச்சித்ரா ஜெயகாந்தன், சிறந்த வீரர்களான டி.ஜி.எஸ். விஜேதுங்க, A.M.N. பெரேரா, P.P. ஹேமந்த ஆகிய வீரர்களுக்கும், ஒட்டுமொத்தப் போட்டியின் பிரதமரின் சவால் கேடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான ஜனாதிபதியின் சவால் கேடயத்தை காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கும் பிரதமர் வழங்கிவைத்தார்.

Post a Comment