Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்று வௌியேறியுள்ளார். 

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர். 

இந்நிலையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர். 

இன்று  மதியம் 1.15 மணியளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை இன்று பிற்பகல் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில், போகச் சொன்னார்கள் போகின்றோம்.  ஆனால் அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget